பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 87 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம், முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதை மீறி, சாலைகளில் வாகனங்களில் சுற்றிய, 87 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். மொத்தம், 51 டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி சாலையில், முழு ஊரடங்கை மீறி, இறைச்சி விற்பனை செய்த, அதேபகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், 28, என்பவரை கைது செய்தனர்.


* ஈரோடு, வில்லரசம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குருமூர்த்தி, 38, கோழி கடையில் வியாபாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், ஈரோடு, வீரப்பம்பாளையம் பிரிவு, வெங்கட்ராமன் மனைவி சம்பூர்ணா, 60, வாத்து கறி வியாபாரம் செய்ததாக, வீரப்பன்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X