பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கண்காணிப்பின்றி நடக்கும் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோபி: அதிகாரிகள் கண்காணிப்பின்றி, கொடிவேரியில் கூட்டு குடிநீர் திட்டப்பணி நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கொடிவேரி தடுப்பணை பகுதியில், 224 கோடி ரூபாய் மதிப்பில், கூட்டு குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. பணி தொடங்கியது முதல், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் வந்தால் மட்டுமே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பணி நடக்கும் இடத்துக்கு வருகின்றனர். மற்றபடி திட்டப்பணி நடக்கும் இடத்துக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் அந்தஸ்திலான அதிகாரிகள், கட்டமைப்பு பணி நடக்கும் இடத்தில், கான்கிரீட் சார்ந்த பணிகளின் தரம், தன்மையை கண்காணிக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் தலை காட்டுவதில்லை. இதேபோல், குடிநீர் திட்டப்பணியின் மொத்த மதிப்பீடு எவ்வளவு, ஒப்பந்த காலம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய தகவல் பலகையும் வைக்கவில்லை. இதனால், திட்டப்பணியில், கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X