பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிவாரணம் கேட்டு வண்ணார் பேரவை முறையீடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் யோகநாதன், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர், கொரோனா நிவாரணம் கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. எனவே ஒவ்வொரு தொழிலாளருக்கும், கொரோனா நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளோம். அதில், 1,000 பேருக்கும் குறைவானவர்களே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். நலவாரியம் மூலம், 2,000 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை கிடைக்கவில்லை. வண்ணார் சமுதாயத்தில், இன்று பெரும்பாலானோர், துணி தேய்க்கும் தொழிலாளர்களாகவே உள்ளனர். எனவே, தொழிலாளர் நலவாரியத்தில், 'துணி தேய்க்கும் தொழிலாளர் நலவாரியம்' ஏற்படுத்தி, அனைத்து தொழிலாளர்களையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X