பொது செய்தி

தமிழ்நாடு

கனிராவுத்தர் குளத்தில் தடுப்பணை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகரின், நீர்பிடிப்பு குளங்களில் ஒன்றான, கனிராவுத்தர் குளத்தில், கழிவுநீர் கலந்ததால் கழிவுநீர் குட்டையானது. இதனால் ஆறு கோடி ரூபாய் மதிப்பில், குளத்தை தூர்வாரி, தடுப்பணை, குளத்தை சுற்றி நடைபாதை, பூங்கா, செயற்கை நீரூற்று, பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தூர் வாரப்பட்ட நிலையில், கழிவுநீர் குளத்தில் கலக்காதவாறு, தனி வாறுகால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குளத்தை சுற்றி கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைத்து, தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில், தடுப்பணை கட்டும் பணி நடக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது: குளத்தில் தூரெடுத்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேக்க, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பணி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X