பொது செய்தி

தமிழ்நாடு

ஜாமினில் ஆள் மாறாட்ட விவகாரம்: ஜெயிலர் மீது பாய்ந்தது நடவடிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மத்திய சிறையில், ஜாமினில் ஆள் மாறாட்டம் நடந்ததில், ஜெயிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்தது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில், ஒரு கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், 39, அவர் மனைவி பவித்ரா, 24, கைது செய்யப்பட்டனர். இவர்கள் சேலம் மத்திய சிறை, பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமின் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதில் பவித்ராவுக்கு கடந்த, 22ல் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், அவரை விடுவிப்பதற்கு பதில், கணவர் ரஞ்சித்குமார், 23ல் விடுவிக்கப்பட்டார். பவித்ராவின் பெற்றோர், தன் மகளை விடுவிக்காதது குறித்து விளக்கம் கேட்ட பிறகே, ஆள்மாறாட்டம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, ஜெயிலர் கணபதி மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நீதிமன்ற உத்தரவு நகலை, ஆன்லைனில் இருந்து பெற்ற சிறை காவலர்கள், அதை வினியோகித்தவர் உட்பட, மேலும் ஆறு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X