பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் ஐவருக்கு கொரோனா: தொற்று பீதியில் பாவடி மக்கள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வீரபாண்டி: ஒரே நாளில் ஐந்து பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஆட்டையாம்பட்டியில், வேலநத்தம், அம்மன் கோவில், வள்ளுவர், கை.புதூர் பாவடி என சுற்றிலும் பாவடிகள் உள்ளன. கடந்த வாரம், கை.புதூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் புதுப்பெண் ஒருவர் என, நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், 60 வயது ஆண் உயிரிழந்தார். இதையடுத்து கை.புதூரில் சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 25 வயது இளைஞர், 16 மற்றும் 8 வயது மாணவியர் என புதுப்பெண்ணின் உறவினர்கள் மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போல் , கடந்த வாரம் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூருக்கு சென்று வந்த அம்மன்கோவில் பாவடியை சேர்ந்த, 60 வயது பெண். சேலம் தனியார் வங்கியில் பணியாற்றும் வேலநத்தம் பாவடியை சேர்ந்த, 24 வயது ஆண் என, ஒரே நாளில் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் அனைத்து பாவடிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து, 100க்கும் மேற்பட்டோரிடம் சளி மாதிரிகளை சேகரித்தனர். நேற்று முன்தினம் வரை, வீரபாண்டி வட்டாரத்தில், 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X