பொது செய்தி

தமிழ்நாடு

கே.என்.புதூர், செம்மாண்டப்பட்டி தடை செய்யப்பட்ட பகுதியில் ஆய்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஓமலூர்: வைரஸ் தொற்றால் தடை செய்யப்பட்ட பகுதிகளில், சப்- கலெக்டர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். காடையாம்பட்டி தாலுகா, கே.என்.புதூரில் கடந்த, 25ல், 37 வயது ஓட்டுனருக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அவரது குடும்பத்தினர் நான்கு பேருக்கு தொற்று பரவியது. மேலும், அதே பகுதியில் உள்ள கர்ப்பிணிக்கும், தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டது. அதே போல், செம்மாண்டப்பட்டியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு, தொற்று ஏற்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை மேட்டூர் சப்- கலெக்டர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளில், நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஜெயக்குமார், வைரஸ் தடுப்பு பணிகள், தினமும் வீடு, வீடாக மக்களை கண்காணிக்கும் பணி குறித்து தெரிவித்தார். தாசில்தார் அன்னபூரணி உடனிருந்தார். முன்னதாக, காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 19 மாற்றுத்திறனாளிகள், ஐந்து முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், ஓமலூர் எம்.எல்.ஏ.,வெற்றிவேல், சப்-கலெக்டர் சரவணன் ஆகியோர், நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X