பொது செய்தி

தமிழ்நாடு

கண்ட இடத்தில் 'துப்பாதே'; மீறினால் ரூ.500 அபராதம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: மாவட்டத்தில் கண்ட இடங்களில் துப்பினால், 500 ரூபாய் உடனடி அபராதம் வசூலிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், மாநகராட்சி, நான்கு நகராட்சி, 33 பேரூராட்சி, 20 ஊராட்சி ஒன்றியம், 385 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொது இடத்தில் எச்சில் துப்புவது அறவே தவிர்க்கப்பட்டு, கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைமீறி, முககவசம் அணியாதவரிடம், ஏற்கனவே அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது பொது இடத்தில், எச்சில் துப்புவோர் கண்டறியப்பட்டால், அவர் மீது நோய் தடுப்பு சட்டம்-1897, பிரிவு-2ன்படி, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாலைகள் மூலம், கொரோனா வைரஸ், அதிகம் பரவுவதை தடுக்கவே அபராத நடவடிக்கை. அனைத்து வகை கடைகள், நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரிவோர், வருகை தருவோர் என, அனைவரும் முக கசவம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும். குறிப்பாக, சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். நோய் பரவலை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X