பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5.80 கோடியில் அறிவியல் பூங்கா: கட்டுமான பணிகளை கமிஷனர் ஆய்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் பள்ளப்பட்டியில், ரூ.5.80 கோடியில் அமையவுள்ள அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேற்று ஆய்வு நடத்தினார்.


சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.933.13 கோடி மதிப்பீட்டில், 73 வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. சூரமங்கலம் பள்ளப்பட்டி பகுதியில், 13 ஆயிரம் சதுர அடி பரப்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அறிவியல் பூங்கா அமைக்க, கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமான பணிகளை, நேற்று சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளப்பட்டி பகுதியில், ரூ.5.80 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் அறிவியல் பூங்காவில், சுகாதார பழக்க வழக்கங்களை கையாளுதல், மனித உடல்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் அவை பரவும் விதம் குறித்த தகவல் பலகைகள், விண்வெளி ஆய்வு சார்ந்த திறனை வளர்த்துக்கொள்ள ஜி.எஸ்.எல்.வி.,- பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள், விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டறிய, 30 பேர் அமரக்கூடிய கோளரங்கம், சூரிய சக்தியில் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள், கியர்களின் வகைகள், மணிக்கூண்டின் செயல்பாடு, கியர் ரயில்கள் உள்ளிட்ட, 18 வகையான அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த செயல்முறைகள் காட்சிப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். உதவி கமிஷனர் செல்வராஜ் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X