பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 5 மாணவர்கள்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஆத்தூர்: பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில் தேர்வு முடிந்தது. ஊரடங்கு காரணமாக மார்ச், 24ல், தேர்வை சில மாணவர்கள் எழுதவில்லை. இவர்கள், நேற்று தேர்வு எழுதுவதற்கு, கல்வித்துறை வாய்ப்பு வழங்கியது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மூன்று தனியார் பள்ளிகள் என, நான்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. வேதியியல், கணக்கு பதிவியல் பாடத்தை, அரசு பள்ளியில் மூன்று மாணவர்கள், இரண்டு தனியார் பள்ளியில், தலா ஒரு மாணவர் என, ஐந்து பேர் எழுதினர். மற்றொரு தனியார் பள்ளி மையத்தில், தேர்வு எழுத இருந்த அரியலூரை சேர்ந்த, மாணவர் நிவாஷ் இரு வாரங்களுக்கு முன், விபத்தில் இறந்ததால் எழுத முடியவில்லை. மாவட்ட கல்வி அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு செய்து, தேர்வு முடிந்ததும், விடைத்தாள் பெற்று, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X