பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த சிறப்பு பயிற்சி துவக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: சாத்தான்குளம் உட்பட, தமிழகத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களையடுத்து, போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த, 13 பணியிடை பயிற்சி மையங்களில், நேற்று எஸ்.ஐ.,க்கள், அதற்கும் கீழான பதவி வகிப்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி துவங்கியது.


சாத்தான்குளத்தில், இரண்டு பேர் பலியான நிலையில், சமூக வலைதளங்களில் போலீசாரின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில், கருத்து பரிமாற்றங்கள் அதிகரித்தது. போலீசின் செயல்பாட்டில், பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உயரதிகாரிகள், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், 13 பணியிடை பயிற்சி மையங்களில், நேற்று துவங்கி மூன்று நாட்கள், மன அழுத்தத்தை குறைப்பது, பேரிடர் நேரத்தில் பொதுமக்களிடம் நடந்து கொள்வது குறித்து பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு, நேற்று சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி மையத்தில், சிறப்பு பயிற்சியை சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார், எஸ்.பி., தீபா கானிகேர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதேபோல், சேலம் மாநகர போலீசாருக்கு, ஜெய்ராம் கல்லூரியில் சிறப்பு பயிற்சியை கமிஷனர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள, 13 பணியிடை பயிற்சி மையங்களில், எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு பயிற்சி துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X