பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் நியமனம் ரத்து: கலெக்டர் அதிரடி உத்தரவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளி ஊராட்சி செயலராக வடிவு, கடந்த, 23ல், நியமிக்கப்பட்டார். அதற்கான பணி நியமன ஆணையை, ஊராட்சி தலைவர் அண்ணாதுரை வழங்கினார். முறைகேடு நியமனத்தை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய பி.டி.ஓ., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதில், 'திறந்தவெளி கல்வி படித்தவரை, பணி நியமனம் செய்யக்கூடாது. அவ்வாறு நியமித்தால், அவருக்கு பதவி உயர்வு அளிக்க இயலாது என்பதை தெரிவித்தும், விதிமுறை மீறி, வடிவு நியமனம் செய்யப்பட்டுள்ளதால்,' அதை, ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. அதையேற்று, வடிவுக்கு வழங்கிய ஊராட்சி செயலர் பணி நியமனத்தை ரத்து செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து, கலெக்டர் ராமன் கூறியதாவது: ஊராட்சி செயலராக நியமிக்கப்பட்ட வடிவு என்பவரின் கணவர், அதே ஊராட்சியில் துப்புரவு பணியாளராக உள்ளார். கணவன், மனைவி இருவரும், ஒரே ஊராட்சியில் பணியாற்றுவது சரியல்ல. அதை விட, முறையற்ற நியமனம், உரிய கல்வித்தகுதி இல்லாமை போன்ற காரணத்தால், பணி நியமனம் மட்டுமல்ல; வேலை அறிவிப்பும் சேர்த்து, ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X