பொது செய்தி

தமிழ்நாடு

கிருமிநாசனி, முக கவசம் வாங்கியதில் ஊழல்: ஓமலூர் ஒன்றிய கவுன்சிலர்கள் 'பகீர்' தகவல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: ஓமலூர் ஒன்றியத்தில், கிருமிநாசினி, கையுறை, முககவசம் வாங்கியதில், ஊழல் செய்திருப்பதாக கவுன்சிலர்கள், 'பகீர்' தகவலை தெரிவித்துள்ளனர்.


சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றிய (தி.மு.க.,) கவுன்சிலர் சிவஞானவேல் தலைமையில், எட்டு கவுன்சிலர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த, 17 ல், நடந்த ஒன்றியக்கூட்டத்தில் கிருமிநாசினி, முக கவசம், கையுறை ஆகியன மார்ச், 25 முதல், மே, 22 வரை இரு மாதங்களில் மட்டும், 11 லட்சத்து, 55 ஆயிரத்து, 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒரு லிட்டர் கிருமிநாசினி, 218 ரூபாய், முக கவசம், 220 ரூபாய், கையுறை, 180 ரூபாய் என, விலை குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்றிய நிர்வாகம் வாங்கிய அதே கடையில், சம அளவு, எண்ணிக்கையில் கிருமிநாசினி லிட்டர், 90 ரூபாய், கையுறை, 16 ரூபாய், முக கவசம், 98 ரூபாய் விலையில் வாங்கியதற்கான ரசீது, தங்களிடம் இருப்பதாக கூறினோம். அவை, எந்தெந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது என கேட்டபோது, உரிய பதில் இல்லை. தொடர்ந்து, பி.டி.ஓ., விடம், இருமுறை நேரில் சென்று கேட்ட போதும், தகவல் தெரிவிக்கவில்லை. கிருமிநாசினி, கையுறை, முக கவசம் வாங்கியதில், பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, அரசுக்கு ஏற்படுத்திய நஷ்டத்தை, உரிய நபர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X