பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் சட்ட திருத்தத்தை கண்டித்து விவசாயிகள் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வீரபாண்டி: மத்திய அரசின் சுற்றுச்சூழல், மின்சாரம், அத்தியாவசிய பொருட்கள் சட்டங்களில் திருத்தங்கள் செய்வதை கண்டித்து, விவசாயிகள் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசு, சுற்றுச்சூழல், மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டங்களில், திருத்தங்கள் செய்வது குறித்து, பொதுமக்கள் கருத்துகளை கேட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை கண்டித்து, நேற்று அகில இந்திய அளவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சேலம் பூலாவரியில் சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூலாவரியில், சக்திவேல் என்பவரது தோட்டத்தில், விவசாயி மோகனசுந்தரம் தலைமையில் திரண்ட விவசாயிகள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கைகளில் கறுப்பு கொடி ஏந்தியபடி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்களால், இந்தியாவின் இயற்கை வளங்கள் சுரண்டப்படும். எட்டு வழிச்சாலை போன்ற, விவசாயத்தை அழிக்கும் அனைத்து திட்டங்களும், எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றிக் கொள்ள முடியும். மின்சார சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொண்டால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் இனி கிடைக்காது; அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தத்தால், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது. விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்பதோடு, நம் நாட்டில் இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளை போகும் வாய்ப்பு உள்ளதால், மத்திய அரசு சட்டங்களில் திருத்தங்கள் செய்வதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X