பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவர்களுக்கு பால் விற்பனை உரிமம்: ஆவின் முகவர்கள் கடும் எதிர்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: டிரைவர்களுக்கு, பால் விற்பனை உரிமம் வழங்க, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆவின் முகவர்கள், அந்த உத்தரவை திரும்ப பெற, அரசை வலியுறுத்தி உள்ளனர்.


தமிழ்நாடு ஆவின் பால் முகவர்கள், விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் அருணாசுந்தர் தலைமையில், நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் பால் முகவர்கள், விற்பனையாளர்கள் என, ஒன்றரை லட்சம் குடும்பத்தினர் உள்ளனர். அனைவரும், பல ஆண்டுகளாக ஆவின்பால் விற்பனை தொழிலை நம்பியே உள்ளனர். புயல், மழை, பனி, வெயில் என பாராமல், தற்போது கொரோனா தொற்று காலத்திலும், முகவர்கள், அவர் தம் குடும்ப உறுப்பினர்கள், தங்கு தடையின்றி நுகர்வோர்களுக்கு தேவையான அளவுக்கு ஆவின்பால் வினியோகம் செய்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். தற்போது, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள். அதன் உரிமையாளர்களுக்கு, நடமாடும் ஆவின்பால் முகவர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இது, ஆவின்பால் முகவர்களின் வருமானத்தை பாதித்து, வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிடும். ஒரு குடும்பத்தை வாழ வைக்க, இன்னொரு குடும்பத்தின் அடுப்பை அணைப்பதாகவே, அரசின் நடவடிக்கை உள்ளது. எனவே, பால் முகவர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கையை ஏற்று, ஓட்டுனர்களுக்கு, பால் முகவர் உரிமம் வழங்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X