பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பால் நிறுவனங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தலைவாசல்: தலைவாசல் அருகே, தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்ததை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, தினமும் ஆறு லட்சம் லிட்டர் பாலை, தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றன. இந்நிலையில், தற்போது கொள்முதல் செய்யும் பாலின் விலையை கொழுப்பு சத்துக்கேற்ப, லிட்டர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் முதல், எட்டு ரூபாய் வரை குறைத்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் நேற்று தலைவாசல் பஸ் நிலையம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முககவசங்களுடன் பெண்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் திரண்டதுடன், சமூக இடைவெளியுடன் சர்வீஸ் சாலையில் அமர்ந்து, கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தலைவாசல் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X