முயல் வேட்டை: ஐந்து பேரிடம் அபராதம் வசூல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முயல் வேட்டை: ஐந்து பேரிடம் அபராதம் வசூல்

Added : ஜூலை 28, 2020
Share

ஓமலூர்: முயல் வேட்டையில் ஈடுபட்ட, ஐந்து பேரிடம், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. டேனிஷ்பேட்டை வனச்சரகம், தொப்பூர் பிரிவு, வெள்ளக்கரடு பகுதியில், வனவிலங்குகளை வேட்டியாடுவதாக வனத்துறையினருக்கு புகார் சென்றது. நேற்று, அப்பகுதியில் டேனிஷ்பேட்டை ரேஞ்சர் பரசுராமமூர்த்தி தலைமையில், வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முயல்களை வேட்டையாட, பேட்டரி லைட்டுடன் சுற்றித்திரிந்த, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அதில், ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த குமார் மகன் ஸ்ரீதர், 20, வையாபுரி மகன் மணிபிரகாஷ், 20, மணி மகன் விஜயகுமார், 20, கவுதம் மகன் ஹரிக்குமார், 20, முருகன் மகன் தினேஷ்குமார், 24 ஆகிய ஐந்து பேரிடம் தலா, 4,000 என, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X