இரு போலீஸ்காரர் உட்பட 31 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரு போலீஸ்காரர் உட்பட 31 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 28, 2020
Share

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, இரு போலீஸ்காரர்கள் உட்பட, 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி அடுத்த சின்னநூலஹள்ளியை சேர்ந்த, 28 வயது போலீஸ்காரர், போச்சம்பள்ளியில் பணியாற்றி வந்தார். உடல் நலம் பாதித்த அவருக்கு, நேற்று கொரோனா உறுதியானது. இதே போன்று, சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் பணியாற்றிய, குமரம்பட்டியை சேர்ந்த, 37 போலீஸ்காரர் மற்றும் தர்மபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய, 23 வயது பெண், 36, 27 வயது ஆண்கள் உட்பட நேற்று மாவட்டம் முழுவதும், 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். துணிக்கடையில் பணியாற்றிய மூன்று பேருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், தர்மபுரி சின்னசாமி நாயுடு தெரு, முகமதுஅலி கிளப்ரோடு, ஆறுமுக ஆச்சாரி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதனால், தர்மபுரியில் உள்ள பழைய திருப்பத்தூர் சாலையில், ஏராளமான வாகன ஓட்டிகள் தங்களது, இருசக்கர வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதன் காரணமாக, அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X