பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு துண்டு பிரசுரம்: விவசாயிகளுக்கு வினியோகம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: பயிர் காப்பீடு திட்டம் குறித்தான துண்டு பிரசுரங்களை, விவசாயிகளுக்கு, வேளாண் துறையினர் வினியோகம் செய்தனர். பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில், காரிப் பருவத்துக்கான, அரசு செலுத்தும் காப்பீட்டு தொகை மற்றும் விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரிமிய தொகை குறித்து, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர் மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, நல்லம்பள்ளி வேளாண் துறை உதவி இயக்குனர் தேன்மொழி நேற்று விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த காப்பீடு திட்டத்தில், அரசு விவசாயிகளுக்கு செலுத்தும் காப்பீடு தொகை, விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை குறித்த விழிப்புணர்வு, துண்டு பிரசுரங்களை அவர், பொதுமக்களிடம் வழங்கினார். வேளாண் அலுவலர் இளங்கோ உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X