பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் அப்துல் கலாமின் 5ம நினைவுநாள் கடைபிடிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, அப்துல்கலாம் கடந்த, 2015, ஜூலை, 27ல் காலமானார். அவரின், ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று காலை, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இவருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தெரசாள், அப்துல்கலாமின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் நேற்று பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவியர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், காரிமங்கலம் ஒன்றிய, தே.மு.தி.க., செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், இக்கட்சி தொண்டர்கள், அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், தமிழக ஹயர் கூட்ஸ், தர்மபுரி மாவட்ட ஒலி, ஒளி சப்ளையர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில், அவரது படம் பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலையில் அலங்கரித்து வைத்திருந்தனர். ஏராளமான பொதுமக்கள், அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ., கட்சி அலுவலகத்தில், அப்துல்கலாமின், நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் கட்சியினர், அப்துல்கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசலு, ராமகிருஷ்ணன், மற்றும் முருகன், ஜேபி பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X