சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் இளம்பெண் உடல்; சப்- கலெக்டர் விசாரணை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அரூர்: அரூர் அருகே, கிணற்றில் இளம் பெண் இறந்து கிடந்தது குறித்து, சப்- கலெக்டர் விசாரித்து வருகிறார். அரூர் அடுத்த பொரிசுமரத்துவளவை சேர்ந்தவர் வேலுமணி, 25; இவரது மனைவி கஸ்தூரி, 20; இவர்களுக்கு, ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கஸ்தூரியை அவரது மாமியார் பெருமாயி திட்டியுள்ளார். இது குறித்து தன் தந்தை அண்ணப்பனிடம், கஸ்தூரி மொபைல்போனில் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, வேலுமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில், கஸ்தூரியின் உடல் மிதந்தது. இது குறித்து, அண்ணப்பன் புகாரின்படி, சம்பவ இடம் வந்த கோட்டப்பட்டி போலீசார் கிணற்றிலிருந்து, கஸ்தூரியின் உடலை மீட்டனர். கஸ்தூரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். திருமணமாகி ஓராண்டே ஆவதால், அரூர் சப் - கலெக்டர் பிரதாப் விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X