பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா உறுதி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று, 61 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 798ஆக உயர்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஓசூரில், 19 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோல், கிருஷ்ணகிரியில், 17 பேருக்கும், தேன்கனிக்கோட்டையில் எட்டு, பர்கூரில் நான்கு, ஊத்தங்கரையில் மூன்று, காவேரிப்பட்டணத்தில் இரண்டு, வேலம்பட்டியில், இரண்டு, மிட்டள்ளி, தேர்ப்பட்டி, பண்ணந்தூர், போச்சம்பள்ளி, வரட்டனப்பள்ளி, கெலங்கலம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் என, 33 ஆண்கள், 28 பெண்கள் என, நேற்று ஒரே நாளில், 61 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 798ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதம், 25 முதல் நேற்று வரை, வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த, 11 ஆயிரத்து, 718 பேர் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அதில், 10 ஆயிரத்து, 627 பேர், 28 நாட்களை முடித்துள்ளனர். தற்போது, 968 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X