பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விளக்க கூட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை விளக்கக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு, மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 24 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன், கோரிக்கை விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பல ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட விவசாய கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், தற்போது வழங்க வேண்டும் என்ற ஆணையை எதிர்த்தும், மத்திய கூட்டுறவு வங்கிகளில், சங்கங்கள் எடுக்கும் தொகைக்கு, 2 சதவீதம் டி.டி.எஸ்., வரி விதிப்பை கண்டித்தும், விற்பனையாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஓசூர், ஒன்றியத்தலைவர் சந்திரன், செயலாளர் பால்ராஜ், கெலமங்கலம் மூர்த்தி, சாரண்டபள்ளி பரமசிவம் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர். ஓசூர் சரகத்தில் உள்ள, 50 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X