பொது செய்தி

தமிழ்நாடு

எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஓசூர்: ராயக்கோட்டையில், விவசாய நிலங்கள் வழியாக, எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழக உழவர் முன்னணி சார்பில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், இருகூரில் இருந்து, கர்நாடகா மாநிலம், தேவனகுந்தி வரை, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம், எரிவாயு குழாய் பதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ராயக்கோட்டை அருகே துவங்கி, 51 கி.மீ., தூரத்துக்கு எரிவாயு குழாய் செல்கிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, பெரும்பாலான நிலங்கள், விவசாய பூமியாக உள்ளன. அதனால், விவசாய நிலங்களை தவிர்த்து, சாலையோரமாக எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நிலத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் பலர் கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக உழவர் முன்னணி சார்பில், விவசாயிகள் பலர் ஒன்றிணைந்து, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நேற்று போராட்டம் நடத்தினர். தமிழக உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசன் தலைமை வகித்தார். போராட்டத்தில், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக்கூடாது. சாலையோரம் குழாய் பதிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X