பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சையில் குறைபாடு: மக்கள் புகார் தெரிவிக்க 'வாட்ஸ் ஆப்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா வார்டில், சிகிச்சை குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்கலாம் என, நலப்பணிகள் இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள, தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 798 பேர் கொரோனா பாதித்து, 337 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை, 16 பேர் இறந்துள்ளனர். தற்போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு வார்டில், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை யில், கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக சிகிச்சை அளிப்பதில்லை என்றும், மருந்து, மாத்திரைகள் வழங்குவதில்லை எனவும், மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்களை, யாரும் கண்டு கொள்வதில்லை எனவும்,பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவனிடம் கேட்டபோது, ''அப்படி எதுவும் நடக்கவில்லை. அனைவருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் இருந்தால், 94434 79364 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X