பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் 166, ராணிப்பேட்டையில் 391 பேர் கொரோனாவால் பாதிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், 166 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 391 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


வேலூர் மாநகராட்சி பகுதியில், 40 பேர், காட்பாடி பகுதியில், 30 பேர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 25 வயதுள்ள மூன்று செவிலியர்கள், அண்ணாநகர் போலீஸ் குடியிருப்பில், 40 வயது ஆண் போலீஸ்காரர் உள்பட நேற்று, 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 5,322 ஆக உயர்ந்துள்ளது.


* ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று, 391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3,981 ஆக உயர்ந்துள்ளது.


* திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று, 44 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1,045 ஆக உயர்ந்துள்ளது.


* ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில், 65 வயது மூதாட்டி, அரக்கோணத்தை சேர்ந்த, 68 வயது மூதாட்டி ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையிலும், வாலாஜாபேட்டையை சேர்ந்த 65 வயது மூதாட்டி, அரக்கோணத்தில், 65 வயது ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையிலும், மின்னல் கிராமத்தை சேர்ந்த, 70 வயது நெசவு தொழிலாளி வேலூர் அரசு மருத்துவமனையிலும் என, ஐந்து பேர் நேற்று முன்தினம் இறந்தனர். இவர்கள் அனைவரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனால், கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 52 ஆக உயர்ந்துள்ளது.


* வேலூர் மாவட்டம், வேலூரை சேர்ந்த 74, 82 வயது முதியவர்கள், 80 வயது மூதாட்டி ஆகியோர், வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் நேற்று இறந்தனர்.


* கொரோனாவால் பாதிக்கப்பட்ட, திருப்பத்தூர் வேலன்நகரை சேர்ந்த, 40 வயது பெண் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X