சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

அதிமுக - பாஜ மோதலுக்கு பிள்ளையார் சுழியா?

Updated : ஆக 18, 2020 | Added : ஜூலை 28, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
'அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் உருவாக, பிள்ளையார் சுழி போட்டாச்சு... அடுத்த வேலையைப் பார்த்து, தேர்தலில் நாம் வெற்றி பெறலாம்...' என, சிலர் கணக்குப் போடும் வேளையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி:எம்.ஜி.ஆர்., சிலை மீது காவி துண்டு போர்த்தியது, சமூக விரோதிகளின் செயல். கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான், இது போன்ற செயல்களில் ஈடுபடுவர். சமூக ஒற்றுமைக்கு ஊறு
அதிமுக - பாஜ மோதலுக்கு பிள்ளையார் சுழியா?

'அ.தி.மு.க., - பா.ஜ., மோதல் உருவாக, பிள்ளையார் சுழி போட்டாச்சு... அடுத்த வேலையைப் பார்த்து, தேர்தலில் நாம் வெற்றி பெறலாம்...' என, சிலர் கணக்குப் போடும் வேளையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி:

எம்.ஜி.ஆர்., சிலை மீது காவி துண்டு போர்த்தியது, சமூக விரோதிகளின் செயல். கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான், இது போன்ற செயல்களில் ஈடுபடுவர். சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்போர், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்போரை மக்கள் அடையாளம் கண்டு, அவர்களை புறந்தள்ள வேண்டும்.

'இந்த விவகாரம் குறித்து, தீர ஆலோசனை நடத்தி, பொதுமக்களின் கருத்தை கேக்குறோம்ன்னு, மத்திய அரசு சொல்லி இருக்குதே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:

மக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை, மத்திய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி, இந்த வரைவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

'அந்தக் காலத்தில் படிப்பறிவு அற்றவர்கள் அதிகம் பேர் இருந்தனர். இப்போதைய நிலை வேறு. எனவே, பயப்படாமல், என்னாகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போமே...' என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை:


latest tamil news




'1971ல் ராமர் படத்தை செருப்பால் அடித்தோம்; தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது, முருக பெருமானை இழிவுபடுத்தியதால், 2021 தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெறும்' என்கிறார், தி.க., தலைவர் வீரமணி. ஹிந்து விரோத தி.மு.க., தோற்கடிக்கப்பட வேண்டும்.

'ஏற்கனவே, காங்., ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்; அதுவே கேட்கப்படவில்லை. இதில், நீங்கள் வேறா...' என, சலிப்பை தெரிவிக்கத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:

மத்திய அரசு அறிவித்துள்ள, மின்சார சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட நான்கு சட்ட மசோதாக்களும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரானவை. இவற்றை மத்திய அரசு உடனே திரும்ப வேண்டும்.

'பா.ம.க., - பா.ஜ., ஏன் ஒற்றுமையாக இருக்கின்றனர் என நினைத்து, எதிர்ப்பு வேலைகளை சில கட்சிகள் துவக்கி விட்டது, உங்கள் அறிக்கை மூலம் தெளிவாகிறது...' என, போட்டுத் தாக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:

மருத்துவ மாணவர் இடஒதுக்கீடு விவகாரத்தில், பா.ஜ.,வுடன், பா.ம.க., இணைந்து, கூட்டணி கச்சேரி நடத்துவது, வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதே, தமிழக மக்களின் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜூலை-202017:35:39 IST Report Abuse
M.COM.N.K.K. பிள்ளையார் சுழி போடுவது என்பது எல்லாம் நல்லபடியாக நடக்கத்தான் கோபம் இருக்கும் இடத்திலேதான் அன்பும் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.புயலுக்கு பின் அமைதி
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஜூலை-202017:18:22 IST Report Abuse
Endrum Indian இதுவும் வெறும் வெறும் சிலை தானே???
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
28-ஜூலை-202016:28:08 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தேசியக்கட்சிகளுடன் உறவு வைத்தாலே தமிழகக் கட்சிகளுக்கு நன்மை ஒன்றும் நடவாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X