பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் 10 போலி டாக்டர்கள் கைது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த, 10 போலி டாக்டர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக, போலி டாக்டர்கள் மக்களிடம் பணம் பறிப்பதாக, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, அவரது உத்தரவுபடி, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் என, 50 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினர். அதில், 10 போலி டாக்டர்களை கைது செய்து, அவர்கள் நடத்திய, 10 கிளினிக்குகளுக்கு, 'சீல்' வைத்தனர்.


இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: போலி டாக்டர்களான, வேலூர், சைதாப்பேட்டையை சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி, 45, கார்ணாம்பட்டை சேர்ந்த பெண் பாரதி, 46, பொன்னரசன், 50, வேலூர் வசந்தபுரம் சீனிவாசன், 51, பென்னாத்தூர் மஞ்சுளா, 40, கொணவட்டம் குல்னா ஸ்ருஜி, 50, அரியூர் நளினி, 35, அணைக்கட்டு மந்தவெளிகுப்பத்தை சேர்ந்த நரசிம்மன், 55, காவனூர் காந்தி, 54, மேல்ஆலத்தூரை சேர்ந்த, பாபு, 60, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும், ஐந்து முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மட்?டுமே படித்துள்ளனர். கொரோனா சிகிச்சைக்கு, 1,000 முதல் 2,000 ரூபாய் வரை பெற்று மருந்து, மாத்திரைகள் வழங்கியுள்ளனர். போலி டாக்டர்கள் குறித்து, 94980 35000 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X