பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று இருப்பதாக போலி 'ரிசல்ட்': பரிசோதனை மையத்திற்கு 'சீல்'

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருச்சி: திருச்சியில், கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக குறித்து கொடுத்ததாக, தனியார் மருத்துவ பரிசோதனை மையத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, உறையூர் அருகே, ராமலிங்க நகரில், நான்கு மாடி கட்டடத்தில், ரத்த வங்கியுடன் இணைந்த, தனியார் மருத்துவ பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது. ஏற்கனவே, டெங்கு பரவிய போது, இந்த மையத்தில் பரிசோதனை செய்தவர்களுக்கு, தவறான அறிக்கை கொடுத்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பியதாக புகார் எழுந்தது. தற்போது, இந்த மையத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில், தொற்று இல்லாதவர்களுக்கும் தொற்று இருப்பதாக, தவறான அறிக்கை கொடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த, 25ல், மையத்தில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா பரிசோதனைக்கு தடை விதித்து, 'நோட்டீஸ்' கொடுத்தனர். இருப்பினும், மற்ற மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடந்தன. இந்நிலையில், நேற்று மருத்துவ பரிசோதனை மையத்தில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மாநகராட்சி சார்பில், கட்டடத்துக்கு சீல் வைத்து, தகர தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகம் தரப்பில், கொரோனா பரிசோதனைக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. 'கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு தவறான அறிக்கை கொடுத்ததற்காக, பரிசோதனை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டட விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதால், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X