சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன், மகனுக்கு தொற்று: கவலையில் இறந்த பெண்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: கணவனுக்கும், 12 வயது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கவலையில் இருந்த பெண், பரிதாபமாக இறந்தார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த, சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த, 45 வயது விவசாயிக்கும், அவரது, 12 வயது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை நினைத்து கவலையில் இருந்த, விவசாயியின், 40 வயது மனைவி, நேற்று காலை திடீரென மயங்கி விழுந்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், உயிரிழந்தார். அவரது உடல், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் கணவரும், மகனும், கடைசியாக அவரது உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும், என அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இறந்த பெண்ணின், 65 வயது தாய்க்கும், ஏழு நாட்களுக்கு முன், கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X