பொது செய்தி

தமிழ்நாடு

மின் திருத்த மசோதாவை கண்டித்து கறுப்பு கொடியேந்தி போராட்டம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ஈரோடு: மின் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கறுப்பு கொடி ஏந்தியும், ஏற்றியும், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மின் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, ஈரோடு மாவட்ட இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், கறுப்பு கொடியேற்றும் போராட்டம் நேற்று நடந்தது.
இதுபற்றி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: இம்மசோதா நிறைவேற்றினால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், குடிசைகளுக்கான ஒற்றை மின் விளக்கு திட்டம், விசைத்தறிகளுக்கு முதல், 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கான முதல், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும். தற்போது, வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகளுக்கு, மூன்று கட்டணமாக உள்ள நிலை மாறி, ஒரே நிலை உருவாகும். இதனால் சாதாரண மக்களும், ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும். கடந்த, 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மின் கட்டமைப்பு, ஊழியர்கள், மின்வாரிய சொத்து அனைத்தும், தனியாரிடம் வழங்கப்படும். இதை கண்டித்து தேசிய அளவில், கறுப்பு கொடியேற்றும், போராட்டத்தை நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


*மொடக்குறிச்சி யூனியனில், லக்காபுரம், சின்னியம்பாளையம், அட்டவனை அனுமன்பள்ளி, கரியாகவுண்டன் வலசு உள்ளிட்ட இடங்களில், விவசாயிகள், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.


*பவானியை அடுத்த மைலம்பாடி, குருவரெட்டியூர் பகுதிகளில், விவசாய நிலத்தில் கறுப்புக்கொடி பிடித்து, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டம் நடந்தது.


*சென்னிமலை அருகே பசுவபட்டி, பூச்சக்காட்டுவலசில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி செயலாளர் இளமதி அர்ச்சுனன், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் பொன்னையன் மற்றும் திரளான விவசாயிகள், கறுப்பு கொடியேந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னிமலை வட்டார உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மேலப்பாளையம், எம்.பி.என்.காலனி, பாரதி நகர், 1010 நெசவாளர் காலனி, பிடாரியூர் மற்றும் நாமக்கல்பாளையம் பகுதிகளில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X