பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி வேடத்தில் விழிப்புணர்வு: பள்ளி மாணவர் அசத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், தேசப்பிதா காந்தியடிகள் வேடத்தில், பள்ளி மாணவர், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கரூர், வேம்பு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். நேற்று, ஜவஹர் பஜார் பகுதியில், காந்தி வேடமணிந்து, 'தனித்திரு, விலகியிரு, விழித்திரு' என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தியபடி நடந்து சென்றார். அந்த வழியாக சென்ற மக்கள், மாணவரின் செயலை பாராட்டினர். இதுகுறித்து, கார்த்திகேயன் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வீட்டில் உட்கார விருப்பம் இல்லை. கொரோனா வைரஸ் குறித்து, தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. என் பங்குக்கு காந்தி வேடமிட்டு, இந்த பணியை செய்து வருகிறேன். வைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதால், பொது மக்கள், அரசு வலியுறுத்தி வரும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X