பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பால் நிறுவனங்கள் விலை குறைப்பு: அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: ''தனியார் பால் நிறுவனங்கள் விலை குறைப்பால், உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: ஆவின் நிறுவனம், 4 சதவீதம் கொழுப்பு சத்து, 8 சதவீதம் இதர சத்துக்களை கொண்ட பாலை, ஒரு லிட்டர், 29.40 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அதே அளவு விலையில், பாலை கொள்முதல் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், கடந்த, 21 முதல் பால் விலையை அதிரடியாக குறைப்பு செய்துள்ளன. தமிழகத்தில் இயங்கும், 10க்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்கள், 20.40 ரூபாய் முதல், 26.90 ரூபாய் வரை மட்டுமே பாலை கொள்முதல் செய்கின்றன. இதனால், உற்பத்தியாளர்கள், ஆவினுக்கு பால் வழங்குவதை அதிகரித்துள்ளனர். ஆவின் பால் கொள்முதல், 29.50 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது, 40.50 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், ஆவின் பால் கொள்முதல், 11 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ள நிலையில், மேலும் அதிகரிக்க ஆவினில் பொதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஆவின் நிர்வாகம், பாலை ஏற்க மறுக்கிறது. எனவே, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X