பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து டிரைவர்களின் காலாவதியான லைசென்ஸ்களை புதுப்பிக்க சிறப்பு ஏற்பாடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச், 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர்களின் லைசென்ஸ் காலாவதியான நிலையில், புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பஸ்களை இயக்க முடியாத நிலை டிரைவர்களுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து, போக்குவரத்து துறை முதன்மை செயலாளருக்கு, சென்னை மாநகர போக்குவரத்து நிர்வாக இயக்குனர் கணேசன் கடிதம் எழுதினார். இதையடுத்து, லைசென்ஸ் புதுப்பிக்க, புத்தாக்க பயிற்சியுடன் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்: டிரைவர்களின் காலாவதி லைசென்ஸ்களை புதுப்பிக்கவும், ஒரு நாள் புத்தாக்க பயிற்சியை, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நிர்வாகங்கள், மாவட்ட கலெக்டர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று தரும் பட்சத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சிறப்பு புத்தாக்க பயிற்சி மூலம் லைசென்ஸ் வழங்கலாம். இதற்காக, மாவட்ட வாரியாக, லைசென்ஸ் புதுப்பிப்பு பட்டியல் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X