பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அணைகள் நீர்திறப்பு அதிகரிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு நேற்று வினாடிக்கு, 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று கர்நாடகாவின் கபினி அணைக்கு, 2,500 கனஅடி நீர், கே.ஆர்.எஸ்., அணைக்கு, 3,100 கனஅடி நீர் வந்தது. இரு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு, 8,000 கனஅடியாக இருந்த கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்திறப்பு நேற்று, 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 5,973 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. நீர்மட்டம், 65.52 அடியாக இருந்தது. கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு சற்று அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை நீர்வரத்தும் அதற்கேற்ப வரும் நாட்களில் அதிகரிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X