தமிழ்நாடு

இ-பாஸ் பயணிகளின் தில்லுமுல்லு: கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சேலம்: இ-பாஸ் பெற்று, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர், பரிசோதனைக்கு பயந்து, தில்லுமுல்லு செய்து வருவதால், கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வோர், இ-பாஸ் பெற்று செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் வரும் பயணிகளை, எல்லையில் நிறுத்தி கொரோனா பரிசோதனை நடத்தி, முடிவுகள் வெளிவந்த பின்பே, அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளால், கொரோனா பரவலை தடுக்க, இந்த நடவடிக்கைகள் உதவியாக உள்ளன. ஆனால், சமீபகாலமாக, இ-பாஸ் பெற்றுத்தரும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு இ-பாஸ் பெற்றுத்தர, 2,000 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர். பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளிலிருந்து தப்பிக்கவும் வழிகளை கற்றுக்கொடுக்கின்றனர். இதன்படி, பெரும்பாலானோர் உண்மையாக செல்ல வேண்டிய மாவட்டத்துக்கு, இ-பாஸ் எடுக்காமல், அதற்கடுத்துள்ள மாவட்டத்துக்கு செல்வதாக அனுமதி பெறுகின்றனர்.

உதாரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, சேலம் மாவட்டத்துக்கு வர வேண்டிய பயணிகள், ஈரோடு வரை, இ-பாஸ் எடுக்கின்றனர். ஈரோடு செல்லும் பயணிகள்தானே என, சேலம் மாவட்ட எல்லையில் உள்ள அதிகாரிகள், பரிசோதனை மேற்கொள்ளாமல் அனுமதித்து விடுகின்றனர். ஆனால், அவர்கள் ஈரோடு செல்லாமல், சேலம் மாவட்டத்தில் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று விடுகின்றனர். இதனால், அரசின் கண்காணிப்பு, பரிசோதனை முயற்சிகள் தோல்வியில் முடியும் சூழல் உருவாகியுள்ளது. இ-பாஸ் பெறுபவர்கள், ஆதார் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டுதான் விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் உரிய மாவட்டத்துக்குள் வராத போது, அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற தில்லுமுல்லுகளை தடுக்க முடியும். இதை அனுமதிக்கும் போது, வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளால், கொரோனா பரவல் பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X