சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொக்லைன் வாடகையை கேட்ட விவகாரம்: இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, கொசூர் பஞ்., கஸ்பாவை சேர்ந்தவர் தங்கவேல், 40; கிருஷ்ணராயபுரம் கிழக்கு, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு சொந்தமாக பொக்லைன் இயந்திரம் உள்ளது. கடந்த, 25 மாலை கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, தொண்டைமாங்கிணம் பஞ்., சந்தையூரைச் சேர்ந்தவரும், முன்னாள் மாவட்ட, தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளருமான மகாலிங்கத்திடம், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் பொக்லைன் பயன்படுத்தியதற்கு வாடகை பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மகாலிங்கம், 45, கொசூர் பஞ்., முன்னாள் தலைவர் அய்யர், பழனிசாமி, கிருபாகரன், சின்னக்காளை, நிதிஷ்குமார் ஆகியோர், தங்கவேலை தாக்கி, மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த தங்கவேல் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கவேலு கொடுத்த புகாரின் படி, மகாலிங்கம் உள்பட ஆறு பேர் மீது, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்தனர். மகாலிங்கம் அளித்த புகார்படி, தங்கவேல், அவருடைய மனைவி பார்வதி, தாயார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X