பஞ்., செயலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்., செயலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம்

Added : ஜூலை 28, 2020
Share

குளித்தலை: சத்தியமங்கலம் பஞ்., செயலாளரை கண்டித்து, பொது மக்கள், வார்டு உறுப்பினர்கள் பஞ்.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் உள்ள சத்தியமங்கலம் பஞ்.,ல், செயலாளராக உள்ளவர் சக்திதாசன். இவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் கழிப்பறை கட்டுமானம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பொது மக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அவரை இடமாற்றக்கோரியும், நடவடிக்கை எடுக்கக் கோரியும், நேற்று, பஞ்., அலுவலகத்தை பொதுக்கள் முற்றுகையிட்டனர். குளித்தலை யூனியன் கமிஷனர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X