பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் துவக்கம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று முதல் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.


கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர், 6ல் நிரம்பியது. இதையடுத்து கடந்த, 10ல் பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. பிறகு, மழை குறைந்ததால், டிசம்பர் இறுதியில், தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 190 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 3.10 அடியாக இருந்தது.


* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 248 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 49.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து, 11 கன அடி தண்ணீர் வெளியேறியது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 9,580 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 9,160 கன அடி தண்ணீரும், இரண்டு கிளை வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X