சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மான் உடல் மீட்பு; வனத்துறை விசாரணை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த மான் குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். கரூர்-சேலம் பழைய சாலை, வெண்ணை மலை பசுபதி பாளையம் பகுதியில், நேற்று காலை, நான்கு வயதுடைய ஆண் மான் ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த மக்கள், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். பிறகு, போலீசார் வனத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் வனவர் பாஸ்கர், வனக் காப்பாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மானின் சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து, மண்மங்கலம் கால்நடை மருத்துவர் மணிகண்டன், மானை பிரேத பரிசோதனை நடத்திய பிறகு, அங்கேயே புதைக்கப்பட்டது. சாலையில் அடிபட்டு இறந்ததா அல்லது யாரேனும் அடித்து கொன்று விட்டனரா என, வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X