பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ்1, பிளஸ் 2க்கு ஒரே மதிப்பெண் பட்டியல்: முறைகேட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: உயர்கல்வி சேர்க்கையில் முறைகேடுகளை தவிர்க்க, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, 2017-18ல் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, 2018-19 ல் பிளஸ் 1 வகுப்புக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண், உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அதேநேரம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2018-19 கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தனித்தனியே மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால், அப்போது பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல், பிளஸ் 2 வகுப்பில் மட்டும் தேர்ச்சி பெற்று, பலர் உயர்கல்வி வகுப்புகளில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கரூர் மாவட்டத்தில் நேற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பெரும்பாலான பள்ளிகளில், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. அதில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் தனித்தனியே இடம் பெற்றிருந்தன. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாட வாரியாக தேர்ச்சியா, தோல்வியா என்ற விபரம் இடம் பெற்றிருந்தது.


இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: புதிய மதிப்பெண் பட்டியல் குறிப்பில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் எல்லா பாடங்களிலும், தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, உயர்கல்விக்கு தகுதியானவர்கள் என்ற விபரம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற அசல் சான்று விரைவில் வழங்கப்பட உள்ளது. இனி பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாமல், பிளஸ் 2 தேர்வில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு வர வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X