சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் இறப்பில் சந்தேகம் 6 நாளுக்கு பின் பிரேத பரிசோதனை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., வாலாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜேந்திரன், 35. கடந்த, 22ல் பெட்டவாய்த்தலை தென்கரை பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். பெட்டவாய்த்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மகன் இறப்பில், அவரைஅழைத்து சென்ற நணபர்கள் மீது சந்தேம் இருப்பதாக, வாலிபரின் தந்தை மற்றும் கிராம பொது மக்கள் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்தனர். திருச்சி டி.ஜ.ஜி.,டமும் புகார் மனு கொடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் சந்தேக நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பின்பு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என, போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, ஆறு நாட்களுக்கு பிறகு, வாலிபர் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X