பொது செய்தி

தமிழ்நாடு

விடுபட்ட பிளஸ் 2 தேர்வு: 8 மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: மாவட்டத்தில், விடுபட்ட பிளஸ் 2 தேர்வை, எட்டு பேர் எழுதினர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு, மார்ச், 2ல் தொடங்கி, 24 வரை நடந்தது. இதில் இறுதிநாள் தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்கு பெற முடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று, மறுதேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, வாங்கல் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. இதில், தேர்வு எழுத, எட்டு மாணவர்கள், ஆறு மாணவியர் என மொத்தம், 14 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், நான்கு மாணவர், நான்கு மாணவியர் என மொத்தம், எட்டு பேர் எழுதினர். ஆறு பேர் தேர்வு எழுத வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X