பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா காலத்திலும் ஊழல்': எம்.பி., ஜோதிமணி குற்றச்சாட்டு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: ''கொரோனா தொற்று பரவி வரும் காலத்திலும் மத்திய, மாநில அரசுகளில் ஊழல் நடக்கிறது,'' என, கரூர், காங்., -எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.


கரூர் அருகே நெரூரில், பள்ளி கட்டடம் கட்டுவதற்கான, பூமி பூஜையில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம், 1994ல் கொண்டு வரப்பட்டது. அதில், மக்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருந்தது. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், மக்கள், மாநில அரசு அதிகாரிகள் கேள்வி கேட்க உரிமை யில்லை. இதுகுறித்து கருத்து கேட்க வரும் ஆக.,11 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு வேண்டாம் என, சொல்லவில்லை. ஆனால், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. தமிழகத்தில் கொரோனா வைரசால், இறந்தவர்களின் மரணம் மறைக்கப்படுவது மட்டுமல்லாமல், பரிசோதனைகளும் முறையாக நடப்பதில்லை. பரிசோதனை கருவிகள் வாங்குவதில் ஊழல், உணவு வழங்குவதில் ஊழல் என, கொரோனா காலத்திலும் ஊழல் செய்யும், இரக்கமற்ற அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X