பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நிலை காவலருக்கு பணி வாய்ப்பு: தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர்: 'இரண்டாம் நிலை காவலருக்கு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மீண்டும் நிரப்பப்பட உள்ள பணியிடங்களில் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு அளித்தனர்.


அதில் கூறியிருப்பதாவது: கடந்த, 2019ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலருக்கு எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடந்தது. அதில், 20 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். 8,538 பணியிடங்களுக்கு அதிக மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 10ஆயிரம் போலீஸ் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் பற்றாக்குறை நிலவி வருவதால், கொரோனா நேரத்தில் பணி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், தொற்று பரவல் காரணமாக உடனடியாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைக்காத, 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, இந்த பணியை வழங்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X