சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

உலக ஹெப்பாடிடிஸ் தினம்

ஹெப்பாடிடிஸ் (ஈரல் அலற்சி) 'பி', 'சி' வைரசால் கல்லீரல், கணையப் புற்றுநோய், கல்லீரல் சுருங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் 32.5 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். உடல் வலி, பசியின்மை, காய்ச்சல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறுதல், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறி. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 28ல் உலக ஹெப்பாடிடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தகவல் சுரங்கம்: முதல் பெண்மணி

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 29,029 அடி. இதில் உலகில் முதன்முதலில் ஏறி சாதனை படைத்த பெண்மணி ஜூங்கோ தபேய். மேலும் இவர் உலகின் உயரமான ஏழு மலைகளிலும் முதலில் ஏறி சாதனை படைத்த பெண்மணி. ஜப்பானை சேர்ந்த இவர் 1939 செப்., 22ல் பிறந்தார். ஆங்கில படிப்பு முடித்து ஆசிரியையாக பணியாற்றியவர். தன் 35 வயதில் 1975 மே 16 ல் எவரெஸ்டில் ஏறி சாதித்தார். ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரை கவுரவிக்கும் விதமாக குறுங்கோள் ஒன்றுக்கு '6897 தபேய்' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். 2016ல் மறைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X