பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரத்தில் ஆடி சுவாதி விழா

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஆடி சுவாதி பெருவிழா கொண்டாடப்பட்டது. ராசிபுரம் அடுத்த, அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள ஓணாங்கரடு, பாலமுருகன் கோவிலில் ஆடி சுவாதி பெருவிழா, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, சுவாமி அம்பாள் கலச வழிபாடு ஆகியவை நடந்தது. சுந்தரர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகிய உற்சவர் திருமேனிக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு, ஏழாம் திருமுறை வழிபாடு, 101 திருப்பதிகம் ஓதி வழிபாடு ஆகியவையுடன் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ராசிபுரம் கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர். விழாவில் அடியார்கள் மற்றும் பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X