பொது செய்தி

தமிழ்நாடு

ப.வேலூர் ராஜா வாய்க்கால் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

ப.வேலூர்: ஜேடர்பாளையத்தில் தொடங்கி நடந்து வரும் ராஜா வாய்க்கால் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து தண்ணீர் திறக்க வேண்டும் என, தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ப.வேலூர் தாலுகா பாண்டமங்கலம், பொத்தனூர், ப.வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையார், பொய்யேரி, பாலப்பட்டி மற்றும் மோகனூர் வரை உள்ள காவிரிக்கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை,வாழை, கோரை உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக, விவசாய தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள், மற்றும் விவசாய தொழிலாளர்கள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஜேடர்பாளையத்தில் இருந்து மோகனூர் வரை ராஜா, கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களில் இரு கரைகளையும், கான்கிரீட்டால் பலப்படுத்தல், அகலப்படுத்துதல் உள்ளிட்ட மறு சீரமைப்பு பணிகளை, பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தலைப்பு பகுதியான ஜேடர்பாளையத்தில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், ராஜா வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருவதால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போதிய தண்ணீர் இன்றி தற்போது பெய்யும் மழையையும், காவிரி பாசனத்தை நம்பியும் விவசாயிகள் உள்ளனர். எனவே, ராஜா வாய்க்காலின் ?சீரமைப்பு பணிகளை, பொதுப்பணித்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். மேலும், வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் ப.வேலூர் பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X