பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 556ஆக உயர்வு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை, 520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில், இருவர் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் பெயர்கள் அந்த மாவட்ட பட்டியலில் இணைக்கப்பட்டன. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 518 ஆக குறைந்தது. இந்நிலையில் நேற்று, குருசாமிபாளையத்தை சேர்ந்த, 2 வயது சிறுமி, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த, 10 வயது சிறுவன் மற்றும் 14 பெண்கள் உள்பட மொத்தம், 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த, எட்டு பேர், ஓலப்பட்டியை சேர்ந்த, நான்கு பேர், நாமக்கல்லை சேர்ந்த, மூன்று பேர், கோவிந்தம்பாளையம், ராசிபுரம், குருசாமிபாளையம், பட்டத்தையன்குட்டை பகுதிகளை சேர்ந்த, தலா, இரண்டு பேர், வெப்படை காந்திநகர், வெண்ணந்தூர், குமாரபாளையம் மேட்டுக்காடு, ஜமீன்இளம்பிள்ளை, காடச்சநல்லூர், ஆலாம்பட்டி, ராமசேஷபுரம், எம்.மேட்டுப்பட்டி சமத்துவபுரம், குப்பநாயக்கனூர், சேந்தமங்கலம் காந்திபுரம், நாவலர்காலனி, வேலகவுண்டம்பட்டி, பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், பல்லக்காபாளையம் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என, மொத்தம், 38 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 556 ஆக உயர்ந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X