பொது செய்தி

தமிழ்நாடு

2 டாஸ்மாக் கடைகளுக்கு 'சீல்' வைப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இரு டாஸ்மாக் கடைகளுக்கு ஏ.டி.எஸ்.பி., 'சீல்'' வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றக் கோரி அனைத்து துறையினரும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று மாலை, மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., ராமு, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பண்டரிநாதன் ஆகியோர், குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். சின்னப்பநாயக்கன்பாளையம் மற்றும் சரவணா தியேட்டர் எதிரில் உள்ள கடைகளில் எவ்வித சமூக இடைவெளியும் பின்பற்றப்படாமல் விற்பனை நடந்து வந்ததால், இரு கடைகளுக்கும், 'சீல்' வைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, இரு கடைகளுக்கும், 'சீல்' வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X